Monday, 8 June 2015

Vacancy @ KV

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சக கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. இதன் பள்ளிகளில் இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் உட்பட, 31 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. 3,754 இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள்; 585 ஆசிரியர் அல்லாத நூலகர், உதவியாளர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் என மொத்தம் 4339 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்: 585

1. துணை முதல்வர்     - 30
2. நிதி அலுவலர் - 1
3. உதவியாளர் - 75
4. அப்பர் டிவிஷன் கிளார்க் (UDC) - 153
5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312
6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 5
7. சுருக்கெழுத்தர் கிரேடு II - 8
8. உதவி ஆசிரியர் - 1

ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்: 3754

I . முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (PGT) (குரூப் பி பணி) - 387

1. ஆங்கிலம் - 45
2. இந்தி - 20
3. இயற்பியல் - 38
4. வேதியியல் - 30
5. பொருளாதாரம் - 32
6. வணிகவியல் - 68
7. கணிதம் - 28
8. உயிரியல் - 36
9. வரலாறு - 30
10. புவியியல் - 21
11. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 39

II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT)(குரூப் பி பணி) - 654

1. ஆங்கிலம் - 72
2. இந்தி - 67
3. சமூக அறிவியல் - 59
4. அறிவியல் - 61
5. சமஸ்கிருதம் - 62
6. கணிதம் - 70
7. P&HE - 117
8. AE - 60
9. WE - 86

III. இதர கற்பித்தல் பணியிலிருந்து (குரூப் பி பணி) - 74

1. நூலகர்     - 74

IV. ஆரம்ப நிலை ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர் (குரூப் பி பணி) - 2639

1. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் - 2566
2. PRT (இசை ஆசிரியர்) - 73

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

துணை முதல்வர் மற்றும் நிதி அலுவலர் பணிக்கு ரூ.1,200. மற்ற அனைத்து பணிகளுக்கும் ரூ.750

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2015

No comments:

Post a Comment